- Technological Breakthrough Needed for Crop Insurance – CEO, PMFBY
- Govt uses Artificial Intelligence to boost Farming.
- RGICL is in its 7th Successful year of execution of PMFBY.
- Our Kharif 2020 - Rabi 2020-21, Kharif 2021 - Rabi 2021-22, Kharif 2022 - Rabi 2022-23 implementing footprint are in Assam, Haryana, Madhya Pradesh, Maharashtra, Odisha, Rajasthan, Tamil Nadu, Andhra Pradesh, Jammu & Kashmir
- More than 15.83 million farmers application covered in Kharif 2020, 2021 & Rabi 2020-21
- Follow us on Twitter @RelianceGenIn
- அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களுக்கு இழப்பு ஏற்படும் பட்சத்த்தில், விவசாயிகளுக்கு அதற்கான காப்புறுதி மற்றும் நிதியுதவி வழங்குதல்.
- விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்து நிலையான வருமானம் பெற வழிவகை செய்தல்..
- புதிய மற்றும் நவீன விவசாய முறைகளை பின்பற்ற விவசாயிகளை ஊக்குவித்தல்.
- விவசாயத் துறைக்கு கடன் வழங்குவதை உறுதி செய்தல்.
- விவசாயிகளுக்கு சீரான பிரீமியம்: அனைத்து காரீஃப் பயிர்களுக்கும் (நெல், பருப்பு வகைகள், நிலக்கடலை, சோளம் மற்றும் சிறு தானியங்கள்) காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சமாக 2% மற்றும் அனைத்து சிறப்பு பருவ பயிர்களுக்கும் அதிகபட்சமாக 1.5% பிரீமியமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். அதே போல், வருடாந்திர வணிக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு அதிகபட்சமாக 5% பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும்.
- குறைந்த பிரீமியத்தில் நிறைவான காப்புறுதி: விவசாயி தானாக செலுத்த வேண்டி இருக்கும் பிரீமியத்தின் பங்கு மிகவும் குறைவாக இருக்கும், ஏனெனில் மீதி பிரீமியத்தை அரசே செலுத்திவிடும். அது மட்டுமல்ல, குறிப்பிட்ட பயிர் இழப்புகளுக்கு, காப்பீடு செய்யப்பட்ட முழு தொகையும் காப்புறுதி செய்யப்படும்.
- தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க பயன்பாடு: ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் மொபைல் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம், ட்ரோன் மற்றும் ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வான்வழி ஆய்வு ஆகியவை தரவுகளைப் பதிவுசெய்து முறையே பதிவேற்ற பயன்படுத்தப்படுகிறது. இது பயிர் இழப்பு மதிப்பீட்டை விரைவுபடுத்தவும், காப்பீட்டு தொகையை செலுத்துவதில் ஏற்படக்கூடிய தாமதத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- இந்திய அரசின் தேசிய பயிர் காப்பீட்டு இணையதளம்: பகுதிகள், பயிர்கள், திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் என அனைத்து முழுமையான டிஜிட்டல் தகவல்களும் தேசிய பயிர் காப்பீட்டு தளத்தில் (NCIP) இருக்கும். இது பல பங்குதாரர்களுக்கு தகவல் அணுகலை எளிதாக்குவதற்கும், விவசாயிகள் பயிர் காப்பீட்டு சேவைகளைப் எளிதில் பெறுவதற்கும் வழிவகை செய்கிறது. என்சிஐபி (NCIP) தளத்தைப் பார்வையிட கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும் - https://www.pmfby.gov.in
- செயல்படுத்தும் நிறுவனம் (IA): அறிவிப்பு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனமானது பயனாளிகள் சேர்க்கை, விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் பருவம் மற்றும் சம்பந்தப்பட்ட கிளஸ்டர் (மாவட்டங்களின் கலவை) ஆகியவற்றிற்கான காப்பீட்டு செயலாக்கத்திற்கு பொறுப்பேற்கும்.
-
மேலும் விவரங்களுக்கு PMFBY முகப்புப் பக்கத்தைப் பார்க்கவும், அதற்கு தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.
திட்டத்தின் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.
- காப்பீட்டிற்கு மாநில அரசின் அறிவிப்பின்படி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்தால் தான் காப்பீடு ஏற்றுக் கொள்ளப்படும்..
- மாநில அரசால் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.
- SLBC/மாநில அரசாங்கத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட நிதி அளவின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது.
- தயவு செய்து இங்கே கிளிக் செய்து, காப்பீட்டு பிரீமியம் கால்குலேட்டரைத் தேர்வு செய்து காப்பீடு செய்யப்பட்ட தொகை, பிரீமியம் விவசாயி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளவும்.
பருவ காலம் | பயிர்கள் | விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் (காப்பீடு செய்யப்பட்ட தொகையின் %)* |
---|---|---|
காரீஃப் | அனைத்து உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் விதைப் பயிர்கள் | காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 2.0 % அல்லது ஆக்சுரியல் விகிதம், இதில் எது குறைவாக உள்ளதோ அதன் படி இருக்கும் |
சிறப்பு பருவம்(சம்பா) | அனைத்து உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் விதைப் பயிர்கள் | காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 1.5 % அல்லது ஆக்சுரியல் விகிதம், இதில் எது குறைவாக உள்ளதோ அதன் படி இருக்கும் |
காரீஃப் மற்றும் சிறப்பு பருவம்(சம்பா) | வருடாந்திர வணிக / வருடாந்திர தோட்டக்கலை பயிர்கள் | காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 5.0 % அல்லது ஆக்சுரியல் விகிதம், இதில் எது குறைவாக உள்ளதோ அதன் படி இருக்கும் |
- தகுதியுள்ள கடன் பெற்ற விவசாயிகளின் காப்புறுதி ஆனது வங்கிகள்/நிதி நிறுவனங்கள் மூலம் காப்பீட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குரிய ஆவணங்களை விவசாயிகள் வங்கியிலேயே சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
- குறிப்பிடபட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து (FIs) அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களுக்கு குறுகிய பருவகால வேளாண் செயல்பாடுகள் (SAO) கடன்/உழவர் கடன் அட்டை (KCC) அனுமதிக்கப்பட்ட பிறகும், இந்தத் திட்டத்தை விசாயிகவள் விருப்பப்பட்டால் தேர்வு செய்து பயன் பெறலாம். (இனி இவர்கள் கடன் பெற்ற விவசாயிகள் என குறிப்பிடப்படுவார்கள்)
கடன் பெறாத விவசாயிகள் வங்கி, CSC & amp; நேரடியாக NCIP என ஏதேனும் ஒன்றின் மூலம் பதிவு செய்யலாம்:
- கடன் பெறாத விவசாயிகள் தங்கள் மாநிலத்தில் இருக்கும் நிலப் பதிவுகளின் தேவையான ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: (உரிமைப் பதிவுகள் (RoR), நில உடைமைச் சான்றிதழ் (LPC) முதலியன) மற்றும்/அல்லது பொருந்தக்கூடிய ஒப்பந்தம்/ஒப்பந்த விவரங்கள்/அறிவிப்பு செய்யப்பட்ட/சம்பந்தப்பட்ட மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட பிற ஆவணங்கள்.
- பங்குதார/குத்தகை விவசாயிகளாக இருந்தால், அந்தந்த மாநிலங்கள் அறிவிப்பிலேயே அது வரையறுக்கப்பட வேண்டும்.
-
Q1 காப்பீடு என்றால் என்ன?
காப்பீடு என்பது ஒரு தனிநபர் அல்லது வணிகத்திற்கு ஏற்படும் எதிர்பாராத இழப்புகளை ஈடுசெய்ய உதவும் ஒரு கருவியாகும், அவ்வாறு அக்கருவி இல்லாத பட்சத்த்தில், அது ஒரு நிதி பேரழிவை ஏற்படுத்தக் கூடும். மேலும், ஒரு சிலரின் இழப்புகள் பலரின் பங்களிப்புகளால் பகிர்ந்து கொள்ளப்படக் கூடிய ஒரு செயல்முறையாகும்.
-
Q2 பயிர் காப்பீடு என்றால் என்ன?
பயிர்க் காப்பீடு என்பது, பயிர் இழப்பு/நஷ்டங்களால் தோன்றக்கூடிய நிச்சயமின்மையால் ஏற்படும் நிதி சம்மந்தமான இழப்புகளை ஈடு செய்யும் வகையிலான மற்றும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாகும்.
-
Q3 PMFBY என்றால் என்ன?
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) என்பது இயற்கையின் எதிர்பாராத மற்றும் சாதகமற்ற மாறுபாடுகளால் ஏற்படக் கூடிய இழப்புகளிலிருந்து விவசாயிகளுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
-
Q4 காப்பீடு செய்யப்பட்ட தொகை / காப்புறுதி வரம்பு என்றால் என்ன?
ஒரு ஹெக்டேருக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையானது கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒன்றாகவே இருக்கும். இது மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழுவால் தீர்மானிக்கப்பட்ட நிதி அளவிற்கு சமமாக இருக்கும் மற்றும் SLCCCI ஆல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்படும்.
ஒரு தனிப்பட்ட விவசாயிக்கான காப்பீட்டுத் தொகையானது, பின்வருவதற்கு சமமாக இருக்கும்: ஒரு ஹெக்டருக்கு, ஒரு யூனிட் பயிரிடப்பட்ட பரப்பளவில் ஒரு பயிரை வளர்ப்பதற்கு தேவையான நிதி அல்லது பரிந்துரைக்கப்பட்ட சராசரி மதிப்பு (பரிந்துரைக்கப்பட்ட சராசரி மகசூல் {NAY} x குறைந்தபட்ச விற்பனை விலை {MSP}/ பண்ணை விளைபொருட்களை உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக விற்பனை செய்யப்படும் விலை) x மாநில அரசால் முடிவு செய்யப்பட்ட காப்பீட்டுக்காக விவசாயி முன்மொழியப்பட்ட அறிவிக்கப்பட்ட பயிரின் பரப்பளவு, இதில் சாகுபடி பரப்பளவு எப்போதும் ஹெக்டேரில் குறிப்பிடப்படும்.
மாநில அரசின் அறிவிப்பில் அல்லது/மற்றும் தேசிய பயிர் காப்பீட்டு தளத்தில் ஒரு யூனிட் பயிரிடப்பட்ட பரப்பளவில் ஒரு பயிரை வளர்ப்பதற்கு தேவையான நிதி எவ்வளவு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பாசனம் உள்ள மற்றும் பாசனம் இல்லாத பகுதிகளுக்கான காப்பீட்டுத் தொகை வேறுபட்டு இருக்கும். -
Q5 PMFBY பற்றிய கூடுதல் விவரங்களை ஒருவர் எங்கே காணலாம்?
காப்புறுதி, காப்பீட்டு விலக்குகள் மற்றும் செயல்பாட்டு முறைகள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு, இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களைப் படிக்கவும்.
முந்தைய செயல்பாட்டு வழிகாட்டுதல்களுக்குclick here -
Q6 மகசூல் கிளைம்களின் மதிப்பீடு எவ்வாறு செய்யப்படுகிறது?
மகசூல் இழப்பு கிளைம்கள் இந்த சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்: [(உத்திரவாத மகசூல் - உண்மையான மகசூல்) / உத்திரவாத மகசூல்] X காப்பீடு செய்யப்பட்டத் தொகை.
-
Q7 இந்தத் திட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் பிரீமியம் விகிதங்கள் என்ன?
பருவ காலம் பயிர்கள் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் (காப்பீடு செய்யப்பட்ட தொகையின் %)* காரீஃப் அனைத்து உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் விதைப் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 2.0 % அல்லது ஆக்சுரியல் விகிதம், இதில் எது குறைவாக உள்ளதோ அதன் படி இருக்கும் சிறப்பு பருவம்(சம்பா) அனைத்து உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் விதைப் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 1.5 % அல்லது ஆக்சுரியல் விகிதம், இதில் எது குறைவாக உள்ளதோ அதன் படி இருக்கும் காரீஃப் மற்றும் சிறப்பு பருவம்(சம்பா) வருடாந்திர வணிக / வருடாந்திர தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 5.0 % அல்லது ஆக்சுரியல் விகிதம், இதில் எது குறைவாக உள்ளதோ அதன் படி இருக்கும் -
Q8 தடுக்கப்பட்ட விதைப்பு தொடர்பான கிளைம் ஆனது விவசாயிகளுக்கு எவ்வாறு பொருந்தும்?
மாநில அரசானது தடுக்கப்பட்ட விதைப்பு / நடவு நிலை பாதிப்புகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்ட காப்பீட்டு யூனிட்டை நிர்ணயம் செய்யும்.
வானிலை தொடர்பான தரவு, செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தொலை உணர்திறன் குறியீடுகள், பயிரின் நிலை மற்றும் விதைக்கப்பட்ட பரப்பளவு தொடர்பான தரவு போன்றவை ப்ராக்ஸி குறிகாட்டியாகப் பயன்படுத்தப்படும்.
இந்தக் காப்பீட்டின் கீழ் செலுத்தப்படும் கிளைம் ஆனது காப்பீட்டுத் தொகையில் 25% ஆக இருக்கும் மற்றும் அதோடு காப்பீடு நிறுத்தப்படும். -
Q9 அனைத்து பயிர்களும் இத்திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுமா?
இந்திய அரசால் அந்தந்த மாநிலத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும்.
-
Q10 அனைத்து விவசாயிகளும் PMFBY திட்டத்தின் கீழ் காப்புறுதி பெற தகுதியானவர்களா?
அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் பங்குதார விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பாதுகாப்புக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். அறிவிப்பு செய்யப்பட்ட/காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யக் கூடிய வட்டியைக் கொண்டிருக்க வேண்டும்.
-
Q11 PMFBY திட்டத்தில் சேருவதற்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா?
PMFBY திட்டத்தில் சேர மாநில அரசால் அறிவிக்கப்பட்ட காப்பீடு செய்ய கடைசி தேதிகள் பின்பற்றப்படுகின்றன. காப்பீடு செய்ய கடைசி தேதி அன்று அல்லது அதற்கு முன் பெறப்பட்ட முன்மொழிவுகள் மட்டுமே செயல் திட்டத்தின் கீழ் அடங்கும்.
-
Q12 தனிப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகைக்கான வரம்பு என்ன?
காப்பீடு செய்யப்பட்ட தொகை = அறிவிப்பு செய்யப்பட்ட பயிரின் நிதி அளவு x காப்பீட்டுக்காக முன்மொழியப்பட்ட அறிவிப்பு செய்யப்பட்ட பயிரின் பரப்பளவு.
-
Q13 கடன் பெற்ற விவசாயிகளிடமிருந்து முன்மொழிவு மற்றும் பிரீமியத்தை வசூலிக்கும் செயல்முறை என்ன?
பிரீமியமானது வங்கிகளில் இருந்து தானாகப் பற்று வைக்கப்படும் (பயிர் கடனுக்காக விண்ணப்பத்த போது விவசாயிகள் சமர்ப்பித்த விவரங்களின்படி).
-
Q14 கடன் பெறாத விவசாயிகளிடமிருந்து முன்மொழிவு மற்றும் பிரீமியத்தை வசூலிக்கும் செயல்முறை என்ன?
கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய, வங்கிகள், CSCகள் அல்லது PMFBY இணையதளம் போன்றவற்றை அணுகலாம். அவர்கள் தங்கள் மாநிலத்தில் இருக்கும் நிலப் பதிவுகளின் தேவையான ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: (உரிமைப் பதிவுகள் (RoR), நில உடைமைச் சான்றிதழ் (LPC) முதலியன) மற்றும்/அல்லது பொருந்தக்கூடிய ஒப்பந்தம்/ஒப்பந்த விவரங்கள்/அறிவிப்பு செய்யப்பட்ட/சம்பந்தப்பட்ட மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட பிற ஆவணங்கள். பங்குதார/குத்தகை விவசாயிகளாக இருந்தால், அந்தந்த மாநிலங்கள் அறிவிப்பிலேயே அது வரையறுக்கப்பட வேண்டும். பிரீமியத்தை இவற்றில் ஏதேனும் ஒரு சேனல்கள் மூலம் செலுத்த வேண்டும். ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பிரீமியம் செலுத்துதல் ஆகிய இரண்டும் காப்பீடு செய்ய கடைசி தேதிக்கு முன் செய்து முடிக்க வேண்டும்.